அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணமில்லை! விஜேதாச ராஜபக்ச

Report Print Steephen Steephen in அறிக்கை

அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை கொடுக்க முடியாத அளவுக்கு நாடு பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்காக நிதியமைச்சு தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவிடம் 10 பில்லியன் ரூபா பணத்தை கோரியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையின் நிதியமைச்சருக்கு கணக்கியல் தொடர்பான எந்த அறிவும் கிடையாது எனவும், இது சம்பந்தமாக கேள்விகளை கேட்கும் போது, அவர் எந்த பதிலையும் வழங்குவதில்லை எனவும் விஜேதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers