ஞானசார தேரர் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 27ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

Report Print Sujitha Sri in அறிக்கை

நீதிமன்ற கட்டளையை மீறி முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரையில் பௌத்த பிக்குவின் பூதவுடலை தகனம் செய்தமை தொடர்பான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரையில் பௌத்த பிக்குவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதில் முல்லைத்தீவு பொலிஸ் அதிகாரி மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் தலைமை பரிசோதகர் ஆகியோரும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் நீதியரசர் யசந்த கோதாகொட மற்றும் நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த தினத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.