இலங்கையில் வருகிறது புதிய சட்டம்! ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி

Report Print Ajith Ajith in அறிக்கை

விளம்பரங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் அடங்கிய வர்த்தமானி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி விளம்பரங்களை வீதிகளில் காட்சிப்படுத்துவதற்கு சட்டம் வகுக்கப்படவுள்ளது.

சுற்றாடல் நீதி தொடர்பான அமைப்பு நீதிமன்றத்தில் பெற்ற ஆணைக்கு அமையவே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி வீதிகளில் விளம்பரங்களை காட்சிப்படுத்துவதற்கு ஒரு வருட அனுமதியை பெறவேண்டும்.

அரச நிறுவனங்களும் இந்தவிடயத்தில் கட்டணங்களை செலுத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.