சஜித்திற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி! ரிசாட் பதியுதீன்

Report Print Gokulan Gokulan in அறிக்கை

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் நிறைவேற்று ஜனாதிபதியாக நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்ட மேன்மை தங்கிய கோத்தபாய ராஜபக்ஷவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்றைய தினம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரமேதாசவுக்கு ஆதரவளித்து, வாக்களித்த அனைவருக்கும் எனது விஷேட நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

புதிய ஜனாதிபதி சகல இனங்களுக்கிடையிலும் சமாதானம், ஐக்கியம், சகோதரத்துவம், நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு ஆகியன நிலைகொள்ளும் வகையில் செயற்படுவாரென நம்புகின்றோம்.

நமது நாடென்ற வகையில் இன ஐக்கியத்துடனும் சகோதர மனப்பாங்குடனும் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு நாட்டை அபிவிருத்தியின் பால் இட்டுச்செல்ல புதிய ஜனாதிபதிக்கு வலிமையும் மனோ தைரியமும் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.