நாட்டு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

Report Print Sujitha Sri in அறிக்கை

அண்மைக்காலமாக அதிகரித்துள்ள இணையவழி மோசடிகள் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை மத்திய வங்கியால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்கள் என்பவற்றை மையப்படுத்தி இந்த நிதி மோசடி முன்னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் இலகு கடன் வழங்கப்படுவதாக தெரிவித்து மக்களை அணுகுவதாக தெரியவருகிறது.

அத்துடன் அவர்கள் வங்கிக் கணக்கு விபரங்கள், கடனட்டை மற்றும் முற்கொடுப்பனவு அட்டைகளின் தொடரிலக்கம் மற்றும் இரகசிய இலக்கம் என்பவற்றை கோரி மோசடியில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே இது குறித்து அவதானமாக இருக்குமாறு மக்களை இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.