மோசடி குறித்து அமெரிக்க கிறீன் கார்ட் விண்ணப்பதாரர்களுக்கு எச்சரிக்கை

Report Print Sujitha Sri in அறிக்கை

அமெரிக்காவில் நிரந்தர வதிவிட உரிமை பெறுவதற்கான கிறீன் கார்ட் லொட்டரி விசா விண்ணப்பதாரர்களிடம் மேற்கொள்ளப்படும் மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க தூதரகத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் குறித்த விசா விண்ணப்பதாரர்களிடமிருந்து பணம் பெறும் வகையிலான முயற்சியிலேயே குறித்த மோசடிக்காரர்கள் ஈடுபடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே விண்ணப்ப செயல்முறைக்கான கட்டணமானது அமெரிக்க தூதரகம் அல்லது தூதரக காசாளரிடம் மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையில் மாற்றமில்லை என்பதுடன், கட்டணம் செலுத்துவது தொடர்பாக மின்னஞ்சல்கள் எதுவும் அனுப்பப்படமாட்டாது எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கூறியுள்ளது.

மேலம், இந்த விசாவிற்காக விண்ணப்பித்தவர்கள் தாம் தெரிவு செய்யப்பட்டுள்ளோமா என்பதை www.dvlottery.state.gov என்ற முகவரியின் மூலம் பார்வையிட்டு உறுதி செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.