பச்சிலைப்பள்ளி பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் மக்கள் பார்வைக்காக சமர்ப்பிப்பு!

Report Print Yathu in அறிக்கை

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2020ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொதுமக்கள் தங்கள் அபிப்பிராயங்களை மற்றும் ஆட்சேபனைகள் ஆலோசனைகள் என்பவற்றை தெரிவிக்க முடியும் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 27.11.2019 திகதி தொடக்கம் 09.12.2019ம் திகதிவரை பின்வரும் இடங்களில் வரவு செலவுத்திட்டம் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

  • பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தலைமை அலுவலகம்
  • புலோப்பளை உப அலுவலகம்
  • புலோப்பளை பொது நூலகம்
  • முள்ளிப்பற்று உப அலுவலகம்
  • முள்ளிப்பற்று பொது நூலகம்
  • முகமாலை உப அலுவலகம்
  • பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம்