இலங்கையின் மிகமுக்கிய பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு

Report Print Sujitha Sri in அறிக்கை

இலங்கையின் மிகமுக்கிய பொருளாதார மத்திய நிலையமான கொழும்பு துறைமுகத்தை சுத்தமான இடமாக மாற்றியமைக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையில் கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்ட சந்தர்ப்பத்திலே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அமைச்சர் மேலும் கூறுகையில்,

துறைமுக வளாகத்தினுள் ஆங்காங்கே குப்பைகளை சேர்த்து வைக்க கூடாது. தற்பொழுதுள்ள கழிவுகளை மிக விரைவாக துறைமுக வாளாகத்திற்குள் இருந்து அகற்ற வேண்டும்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணிகள் முனையத்தின் ஊடாக கொழும்பு துறைமுக வளாகத்திற்குள் உட்புகுகின்றார்கள்.

அவர்களின் மனங்களை கவரும் வகையிலான சுற்றுபுறச் சூழலை கொழும்பு துறைமுகத்தினுள் ஏற்படுத்த வேண்டும்.

அத்துடன், துறைமுக ஊழியர்கள், சேவை பெறுனர்கள் துறைமுகத்தினுள் காலத்தை செலவிடும் பொழுது எவ்வித தடங்கல்களுமின்றி தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்.

துறைமுகத்திற்குள் உள்ள கழிவுகளை வெளியேற்றும் பொழுது சுங்க திணைக்களத்திற்கு வரி செலுத்த நேரிடும். இந்த நிலை காரணமாக துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான

பாவனைக்கு பொருத்தமற்ற இரும்பு துண்டுகள் மற்றும் ஏனைய பொருட்களை வெளியேற்றுவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

எனவே வரிகளை அகற்றி துறைமுக வளாகத்திற்குள் இருந்து கழிவுகளை அகற்றுவதற்கான முறையொன்றினை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.