வ‌ட‌க்கு, கிழ‌க்கில் மாவீர‌ர்தின‌ம் கொண்டாட‌ப்ப‌ட்ட‌மை மூலம் ஜனாதிபதி, பிரதமரால் நிரூபிக்கப்பட்டுள்ள விடயம்

Report Print Abdulsalam Yaseem in அறிக்கை

அர‌சாங்க‌த்தின் எத்த‌கைய‌ இடையூறும் இன்றி வ‌ட‌க்கு, கிழ‌க்கில் மாவீர‌ர்தின‌ம் கொண்டாட‌ப்ப‌ட்ட‌மை ஜனாதிப‌தி கோட்டாப‌ய‌ ம‌ற்றும் பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வின் ஆட்சி இன‌வாத‌ம‌ற்ற‌ ஆட்சி என ச‌ர்வ‌தேச‌த்துக்கு நிரூபிக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும்,

த‌மிழ் ம‌க்க‌ள் த‌ம‌து ம‌ர‌ணித்த‌ உற‌வுக‌ளை கொண்டாடும் உரிமை அவ‌ர்க‌ளுக்கு உள்ள‌து. யாருக்கும் இடையூறு இன்றி இத‌னை கொண்டாட‌ அர‌சாங்க‌ம் அனும‌திய‌ளித்த‌மை பாராட்டுக்குரிய‌ விட‌ய‌மாகும்.

மாவீர‌ர்தின‌த்தை வைத்து அர‌சுக்கெதிராக‌ இன‌வாத‌ம் பேச‌ முனையும் த‌மிழ் அர‌சிய‌ல் ச‌க்திக‌ள் அர‌சின் இந்த‌ அனும‌தியை பார்த்து வெட்கி த‌லை குனிந்துள்ள‌ன‌ர்.

கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌ வெற்றி பெற்றால் நாட்டில் இர‌த்த‌ ஆறு ஓடும் என‌ த‌மிழ் க‌ட்சிக‌ள் ப‌ல‌வும், முஸ்லிம் க‌ட்சிக‌ள் சில‌வும் தேர்த‌ல் கால‌த்தில் ம‌க்க‌ளை அச்சுறுத்திய‌ போது அவ்வாறு எதுவும் ந‌ட‌க்காது என்று கோட்டாப‌ய‌ ம‌ற்றும் ம‌ஹிந்த‌வை த‌மிழ‌ர்க‌ளும், முஸ்லிம்க‌ளும் ந‌ம்ப‌லாம் என்றும் நாட்டை ஆள்வ‌த‌ற்கு முதுகெலும்புள்ள‌ ராஜ‌ப‌க்ஷர்களே தேவை என‌ உல‌மா க‌ட்சி சொல்லிய‌து.

அத‌ற்கேற்றாற்போல் த‌மிழ் ம‌க்க‌ளால் த‌ம் மாவீர‌ர்தின‌ம் சுத‌ந்திர‌மாக‌வும், பாதுகாப்பாக‌வும் கொண்டாட‌ப்ப‌ட்ட‌மை சிற‌ந்த‌ ஆட்சிக்கு எடுத்துக்காட்டாகும் என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.