2016ம் ஆண்டு முதலே இலங்கையில் பயங்கரவாத தாக்குதலுக்கான எச்சரிக்கை! வெளியாகியுள்ள தகவல்

Report Print Ajith Ajith in அறிக்கை

ஐ.எஸ் உடன் இணைந்திருந்தவர்களே உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியதாக பாதுகாப்பு கற்கைகளுக்கான சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின்போது அவர் இந்த விடயத்தை நேற்றைய தினம் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எஸ் உடன் நேரடித் தொடர்பை கொண்டிருந்த சஹ்ரானினால் நேரடியாக மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பான சாட்சியங்களை கண்டறிய முடியாது என்றும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

மேலும், 2016ம் ஆண்டு முதலே இலங்கையில் பயங்கரவாத தாக்குதலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆசிய பசுபிக்கில் 63 வீத முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

இலங்கையில் 200 தொடக்கம் 300 ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதாக நான் 2016ம் ஆண்டே கூறிவிட்டேன்.

எனவே ஐ.எஸ் ஆதரவாளர்கள் அமைப்பு ஒன்றை உருவாக்கும்வரை வரை சிறிசேன - ரணில் அரசாங்கம் காத்திருக்க அவசியம் இல்லை என்பதை தாம் அப்போதே தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers

loading...