இலங்கை எங்கே உள்ளது? புதிய அறிக்கை தெரிவிக்கும் விடயம்

Report Print Sujitha Sri in அறிக்கை

2019ஆம் ஆண்டில் ‘Where is’ என்ற பிரிவின் கீழ் ‘Where is Sri Lanka’ என்ற தேடுதலே அதிகளவானோரால் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் தேடுகைக்கான புதிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை எங்கே உள்ளது என்ற இந்த தேடுதலானது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த சந்தர்ப்பத்தில் உலக நாடுகளின் கவனம் இலங்கை மீது காணப்பட்டதுடன், இந்த சந்தர்ப்பத்திலேயே இலங்கை எங்குள்ளது என்ற தேடுதலும் அதிளவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.