உணவுப்பொருட்களை கொள்வனவு செய்யும் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

Report Print Sujitha Sri in அறிக்கை

உணவுப்பொருட்களை கொள்வனவு செய்யும் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மிளகாய்த்தூள், மசாலாத்தூள் மற்றும் அரிசி வகைகள் ஆகியவற்றை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தலை சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

மேலும், பண்டிகை காலத்தை முன்னிட்டு தற்போது வியாபார நிலையங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்போது பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பளை செய்த 726 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.