ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்திப்போம்

Report Print Gokulan Gokulan in அறிக்கை

ஆழிப்பேரலையால் உயிர் பறிக்கப்பட்ட உறவுகளுக்காகவும் , உயிரோடு வாழ்ந்து அவர்களுக்காக உருகும் உறவுகளுக்காகவும் இறைவனை பிராத்திப்போம் என நாடாளுமன்ற உறப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இலங்கையில் ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருந்தன.

இந்த கொடூர சம்பவம் நடந்து இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும்,

இயற்கை அன்னை எமக்கு பல கொடைகளை வழங்கியுள்ளாள். நீர், நிலம், காற்று அவற்றில் முக்கியமானவை.

ஆனால், அக்கொடைகள் சில சந்தர்ப்பங்களில் ஆழிபேரலையாக, பூகம்பமாக, சூறாவளியாகக் குமுறுவதுண்டு.

அக்குமுறல்களினால் எமது உறவுகளின் உயிர்கள் பறிக்கப்படுவதுண்டு. அந்த வகையில் , 2004/12/26 அன்று எமது நாட்டில் ஏற்பட்ட ஆழிப்பேரலை அரக்கனின் கொடுஞ்செயலால் எமது மக்கள் பலரின் இன்னுயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன.

பறிக்கப்பட்ட உறவுகளின் ஆத்மாக்கள் சாந்தியடைவதற்காக மீண்டுமொருதடவை நாம் அனைவரும் இறைவனைப் பிராத்தனை செய்வோம்.

மறைந்த எம் உறவுகளின் உறவுகள் ஆத்ம பலத்தினைப் பெறுவதற்காகவும் பிராத்திப்போம்.

உயிர் பறிக்கப்பட்ட உறவுகளே, உயிரோடு இருந்து நினைத்துருகும் உறவுகளே எல்லோருக்காகவும் இறைவனை வேண்டுகின்றேன் என தெரிவித்துள்ளார்.

Latest Offers