முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை நீக்க‌ கோரி முன்வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற பிரேர‌ணைக்கு கண்டனம்

Report Print Abdulsalam Yaseem in அறிக்கை

முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை நீக்க‌ வேண்டும் என‌ ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சியின் நிய‌ம‌ன‌ எம்.பியான‌ அதுர‌லிய‌ தேர‌ரின் நாடாளுமன்ற பிரேர‌ணையை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ‌ரின் இந்த‌ முய‌ற்சிக்கு கார‌ண‌ம் மேற்ப‌டி ச‌ட்ட‌த்தில் திருத்த‌ம் கொண்டு வ‌ர‌ வேண்டும் என‌ சில‌ முஸ்லிம் பெண்க‌ளும், முஸ்லிம் அமைச்ச‌ர்க‌ளும், முஸ்லிம் அமைப்புக்க‌ளும் மேற்கொண்ட‌ ம‌ட‌த்த‌ன‌மான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளாகும் என‌ குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வி இன்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும்,

முஸ்லிம் விவாக‌, விவாக‌ர‌த்து ச‌ட்ட‌த்தில் திருத்த‌ம் கொண்டு வ‌ர‌ வேண்டும் என‌ சில‌ ஐரோப்பிய‌ அடிமைக‌ளான‌ முஸ்லிம் பெய‌ர் தாங்கிய பெண்க‌ளும், முன்னாள் அமைச்ச‌ர் ர‌வூப் ஹ‌க்கீம் போன்றோரும் முய‌ற்சிக‌ள் மேற்கொண்ட‌ போது இதில் எத்த‌கைய‌ திருத்த‌த்துக்கும் இட‌ம‌ளிக்க‌ கூடாது என்றும், அவ்வாறு இட‌ம‌ளித்தால் நாளை இச்ச‌ட்ட‌த்தை முற்றாக‌ நீக்க‌ கோருவார்க‌ள் என்ப‌தையும் சுமார் ப‌த்து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பாக‌வே உல‌மா க‌ட்சி ம‌ட்டுமே தெரிவித்து வ‌ந்த‌து.

ஆனால் எம‌து க‌ருத்தை க‌வ‌னிக்காது சில‌ பெண்க‌ளை திருப்திப்ப‌டுத்துவ‌த‌ற்காக‌ முஸ்லிம் அமைச்ச‌ர்க‌ளும், அமைப்புக்க‌ளும் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌ம் திருத்த‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ கூறின‌.

ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ ஆட்சியில் நீதி அமைச்ச‌ராக‌ இருந்த‌ ர‌வூப் ஹ‌க்கீம் இத‌ற்கு தீவிர‌மாக‌ உழைத்தார்.

ஆனாலும் இதில் எத்த‌கைய‌ மாற்ற‌மும் வேண்டாம் என‌வும், இது விட‌ய‌த்தில் உல‌மா ச‌பையும் உல‌மா க‌ட்சியும் இணைந்து எடுக்கும் தீர்மான‌ம் ம‌ட்டுமே க‌வ‌ன‌த்தில் எடுக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி அன்றைய‌ ஜ‌னாதிப‌தி ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌விட‌ம் தெரிவித்த‌து.

அக்க‌ருத்துக்கு மறைந்த‌ அஸ்வ‌ர் ஹாஜி அல‌வி மௌலானாவும் ஆத‌ர‌வு தெரிவித்த‌தால் இது விட‌ய‌த்தை ம‌ஹிந்த‌ அர‌சு கிட‌ப்பில் போட்ட‌துட‌ன், ஹ‌க்கீமையும் வாய் மூடி இருக்கும்ப‌டி சொன்ன‌து.

பின்ன‌ர் 2015ஆம் ஆண்டு வ‌ந்த‌ ஐ.தே. க‌ அர‌சில் மீண்டும் சில‌ முஸ்லிம் பெண்க‌ள் இது விட‌ய‌த்தில் அக்க‌றை செலுத்தின‌ர். இப்பெண்க‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ சில‌ மௌல‌விமாரும் இருந்த‌மை வேத‌னையான‌து.

ஆனாலும் இது ச‌ம்ப‌ந்த‌மான‌ முய‌ற்சிக‌ளை உல‌மா க‌ட்சி ம‌ட்டும் தொட‌ராக‌ க‌ண்டித்த‌துட‌ன் எக்கார‌ண‌ம் கொண்டும் இதில் கைவைக்க‌ வேண்டாம் என‌வும், அவ்வாறு கைவைக்க‌ இட‌ம‌ளித்தால் ஒரேய‌டியாக‌ இத‌னை நீக்கும்ப‌டி இன‌வாதிக‌ள் கூறுவ‌ர் என‌ கூறிய‌து.

எம‌து இக்க‌ருத்துக்கு ஆத‌ர‌வாக‌ உல‌மாக்க‌ளும் முஸ்லிம் ச‌மூக‌மும் ஒன்று ப‌ட்டிருந்தால் இம்முய‌ற்சிக‌ளை த‌டுத்திருக்க‌லாம்.

அத‌ன் பின் ஸ‌ஹ்ரானின் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ முட்டாள் செய‌லை தொட‌ர்ந்து மேற்ப‌டி திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை மாற்ற‌ வேண்டும் என‌ 99 வீத‌ முஸ்லிம்க‌ள் வாக்கு பெற்ற‌ ஐ.தே.க‌ ஆட்சியின் அமைச்ச‌ர‌வை முடிவெடுத்த‌து.

அத்துட‌ன் காழி நீதிம‌ன்ற‌ம் என்ற‌ பெய‌ரையும் மாற்றுவ‌து என‌ அறிவித்த‌து.

த‌ற்போது அத்துர‌லிய‌ தேர‌ர் ஜ‌னாதிப‌தி கோட்டாவுக்கு இறுதி நேர‌த்தில் ஆத‌ர‌வு தெரிவித்த‌ போதும் அவ‌ர் இன்ன‌மும் ஐ.தே.க‌ எம்.பியாக‌ இருப்ப‌தால் த‌ன‌க்கு எம்.பி ப‌த‌வி த‌ந்த‌ விசுவாச‌த்துக்காக‌ ஐ.தே.க‌ அமைச்ச‌ர‌வின் முடிவை இப்போது நாடாளுமன்றத்தில் முன் வைத்து ஒரேய‌டியாக‌ இச்ச‌ட்ட‌த்தை நீக்க‌ வேண்டும் என‌ முன் தெரிவித்துள்ளார்.

இம்முய‌ற்சியை உல‌மா க‌ட்சி க‌ண்டிப்ப‌துட‌ன் இவ‌ற்றை எதிர்த்து நாடாளும‌ன்றில் பேச‌ ஒரு மௌல‌வி இல்லாமைக்கான‌ பொறுப்பை முஸ்லிம் ச‌மூக‌மே ஏற்க‌ வேண்டும்.

உல‌மா க‌ட்சியை முஸ்லிம்க‌ள் தேசிய‌ ரீதியாக‌ ப‌ல‌ப்ப‌டுத்தியிருந்தால் அத‌ன் அர‌சிய‌ல் க‌ருத்துக்க‌ளை செய‌ற்ப‌டுத்தியிருந்தால் இந்நேர‌ம் இர‌ண்டு மௌல‌விக‌ளாவ‌து நாடாளும‌ன்ற‌த்தில் இருந்திருப்ப‌ர்.

ஒரு தேர‌ரின் இஸ்லாம் விரோத‌ முய‌ற்சிக்கு இன்னொரு மௌல‌வி நாடாளும‌ன்றில் ப‌தில் கொடுப்ப‌தை புத்தியுள்ள‌ சிங்க‌ள‌ ச‌மூக‌ம் ஏற்றுக்கொள்ளும்.

த‌ற்போதைய‌ நாடாளும‌ன்றில் இஸ்லாமிய‌ அறிவு பூர‌ண‌மாக‌ உள்ள‌ ஒருவ‌ரும் இல்லை என்ப‌து இந்த நாட்டின் 20 ல‌ட்ச‌ முஸ்லிம்க‌ளுக்கும் அவ‌மான‌மாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.