உயர் நீதிமன்ற நீதியரசர்களுக்கான இரு வெற்றிடங்களுக்கு இருவர் பரிந்துரை

Report Print Ajith Ajith in அறிக்கை

உயர் நீதிமன்றத்தில் ஏற்பட்டுள்ள நீதியரசர்களுக்கான இரண்டு வெற்றிடங்களுக்கு பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரிய மற்றும் சட்டமா அதிபர் டப்புல்ல டி லிவேரா ஆகியோர் இரண்டு பேரை பரிந்துரைத்துள்ளனர்.

நீதிபதிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மேற்கொண்ட தொலைபேசி கலந்துரையாடல் குரல் பதிவுகள் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் யசந்த கோத்தாகொடவும் ஒருவராவார். இவர் காலஞ்சென்ற நீதியரசர் பிரசன்ன ஜெயவர்த்தனவுக்கு பதிலாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை மேலதிக மன்றாடியார் நாயகம் மற்றும் லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சரத் ஜெயமானேயை உயர் நீதிமன்ற நீதியரசராக சட்டமா அதிபர் பரிந்துரை செய்துள்ளார்.

இதற்கிடையில் ஜனாதிபதியை இந்த வெற்றிடத்துக்கு ஒருவரை பரிந்துரை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவர்களில் தகுதியான ஒருவரை ஜனாதிபதி, சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரை செய்வார்.

இது இவ்வாறிருக்க ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி கலந்துரையாடலில் ஈடுபட்டதாக கூறப்படும் கிஹான் பிலப்பிட்டிய, தம்மிக்க ஹேமபால மற்றும் இளைப்பாறிய நீதிபதி பத்மினி ரணவக்க ஆகியோரிடம் பிரதம நீதியரசர் விளக்கம் கோரியுள்ளார்.

இந்த விளக்கம் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் ஊடாக கோரப்பட்டுள்ளது.