இலங்கையில் அறிமுகமாகிறது புதிய சட்டம்! இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

Report Print Sujitha Sri in அறிக்கை

புலனாய்வு பிரிவுகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் அதிகாரமளித்தலுக்கான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விடயத்தை அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பானது இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்றிருந்தது.

இதில் வைத்தே குறித்த புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்து அனைத்து புலனாய்வு பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.