மனைவியுடன் தலைமறைவான ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி

Report Print Steephen Steephen in அறிக்கை

கைது செய்யுமாறு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவும், அவரது மனைவியும் வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகிறது.

குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் நேற்று கொழும்பு - 7இல் உள்ள இவர்களின் வீட்டுக்கு சென்ற போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு எயார் பஸ் விமானங்களை கொள்வனவு செய்த போது இலஞ்சம் பெற்றமை தொடர்பாக இவர்களை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்களின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்கவும் குற்றவியல் விசாரணை திணைக்களம் நீதிமன்றத்திடம் அனுமதியை பெற்றுள்ளது.

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி ஆகியோர் நாட்டில் இருந்து வெளியேறவும் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.