கல்முனை விவகாரம்! த.தே.கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனை

Report Print Abdulsalam Yaseem in அறிக்கை

க‌ல்முனை விட‌ய‌த்தில் த‌மிழ‌ர்க‌ளுட‌ன் பேசித்தான் தீர்வு காண‌ப்ப‌ட‌ வேண்டுமென‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் சொல்வ‌து வேடிக்கையாக‌ உள்ள‌து என உலமா கட்சி தெரிவித்துள்ளது.

அப்ப‌டியென்றால் இவ்வ‌ள‌வு கால‌மும் ஏன் இத‌னை பேசித்தீர்க்க‌வில்லை என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

உலமா கட்சியால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,

உண்மையில் க‌ல்முனை பிர‌ச்சினையை த‌மிழ‌ரும், முஸ்லிம்க‌ளும் இணைந்து மிக‌ இல‌குவாக‌ தீர்க்க‌ முடியும். ஆனாலும் இத‌னை தீர்க்க‌ மு.காவும், த.தே.கூட்ட‌மைப்பும் முன் வ‌ராது.

கார‌ண‌ம் இந்த‌ விட‌ய‌ம்தான் முஸ்லிம்க‌ளை உசுப்பேத்த‌ மு.காவுக்கும், த‌மிழ‌ர்க‌ளை உசுப்பேத்த‌ த‌மிழ்த் தேசியக் கூட்ட‌மைப்புக்கும் உள்ள‌ மிக‌ முக்கிய‌ இரையாகும்.

க‌ட‌ந்த‌ 52 நாள் பிர‌ச்சினையின் போது மு. காவும் த‌. கூட்ட‌மைப்பும் இணைந்து ர‌ணிலை காப்பாற்ற‌ முனைந்த‌வ‌ர்க‌ள் த‌மிழ் - முஸ்லிம் ஒற்றுமையை ஏற்ப‌டுத்த‌க்கூடிய‌ வ‌கையில் ஏன் இது விட‌ய‌த்தில் வெளிப்ப‌டையாக‌ பேசி தீர்வு ஒன்றை எழுத‌ முடியாது?

இனியாவ‌து இது விட‌ய‌த்தில் மு.காவும், த‌.கூட்ட‌மைப்பும் நேர‌டியாக‌ பேச‌ வேண்டும்.

க‌ல்முனை உப‌ செய‌ல‌க‌த்தை ர‌த்து செய்து விட்டு பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பு போன்ற‌ பிர‌தேச‌ங்க‌ளை இணைத்து பாண்டிருப்பு செய‌ல‌க‌ம் என்ற‌ பெய‌ரில் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு செய‌ல‌க‌ம் வ‌ழ‌ங்கும் ப‌டி மு.காவும் த‌மிழ்த் தேசியக் கூட்ட‌மைப்பும் இணைந்து ஜ‌னாதிப‌தியிட‌ம் பிரேர‌ணை முன்வைத்தால் இப்பிர‌ச்சினையை இல‌குவாக‌ தீர்க்க‌லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.