தமிழினப் படுகொலையினை மேற்கொண்டது இலங்கை அரசுதான்! சர்வதேச சமூகத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Report Print Gokulan Gokulan in அறிக்கை

சிங்கள ஆட்சியாளர்களின் கடந்தகால வரலாற்றில் பண்டா - செல்வா, டட்லி - செல்வா போன்ற பல ஒப்பந்தங்களை கிழித்தெறித்தவர்களுக்கு, சர்வதேச தீர்மானம் ஒன்றினை தூக்கியெறிவதும், ஆணையங்களை அமைத்து காலத்தை கரைத்து தப்பித்துக் கொள்வதும் இலங்கையின் பொறுப்பற்ற அரசியல் நடத்தையை சர்வதேசத்துக்கு வெளிக்காட்டி உள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைச்சபையில் ஐ.நா தீர்மானத்தில் இருந்து தாம் விலகுவதான இலங்கை வெளிவிகார அமைச்சரின் உரை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும்,

சிங்கள பௌத்த பேரினவாத நிலைப்பாட்டை வெளிக்காட்டும் வகையில் அமைந்த இலங்கை வெளிவிவகார அமைச்சரின் உரையானது, பொய்களும், ஏமாற்றுக்களும், பொறுப்பற்றதுதான மட்டுமல்லாது, பழியினை பிறர் மீது சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்வதான உத்தியைக் கொண்டது.

குறிப்பாக குற்றங்கள் புரிந்த இராணுவ தரப்பினை நாயகர்களாக கொண்டாடிக் கொண்டு ஆணையம் அமைப்போம் என்பது ஆக்கிரமிப்பாளனின் நீதியாகவுள்ளது.

பூகோள அரசியலில் தம்மை பகடைக்காயாக சர்வதேச சக்திகள் கையாளுகின்றன என்ற இலங்கைவின் வெளிவிவகார அமைச்சரின் கருத்தினை முற்றாக நிராரித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், உண்மையில் பூகோள அரசியலுக்குள் அகப்பட்டு பாதிக்கப்பட்டது தமிழர்கள்தான் என தெரிவித்துள்ளார்.

இலங்கைத்தீவை மையப்படுத்திய பூகோள அரசியலை அரசென்ற வகையில், தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழினப் படுகொலையினை மேற்கொண்டது இலங்கை அரசுதான்.

மனிதகுலத்துக்கு எதிரான வகைதொகையான பாரிய குற்றங்களை விசாரிப்பதற்குரிய நீதிக்கட்டமைப்பு இலங்கைவில் இல்லை என்ற நீதிச் சுதந்திரத்துக்கும், சட்டத்துறை சுதந்திரத்திரத்துக்குமான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் மொனிக்கா பிங்கோவின் கூற்றினைச் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன்,

இலங்கையை அனைத்துலக குற்றிவியல் நீதிமன்றத்திலோ (ICC) அல்லது இனப்படுகொலை தடுப்புக்கான அனைத்துலக உடன்பாட்டுக்கு அமைய அனைத்துல நீதிமன்றத்திலோ (ICJ) இலங்கையை உடனடியாக சர்வதேச சமூகம் பாரப்படுத்த வேண்டும் என கோரியுள்ளார்.