வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

Report Print Ajith Ajith in அறிக்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

நாட்டுக்கு பாரிய வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் சுமார் 10 லட்சம் பேர் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள வேலைக்கொள்வோருடன் கலந்துரையாடி ஓய்வூதிய திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.