அகவை 50இல் காலடி பதிக்கும் வைத்தியக் கலாநிதி சத்தியமூர்த்தியை வாழ்த்தும் நண்பர்கள்

Report Print Dias Dias in அறிக்கை

வைத்தியக் கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தியின் 50ஆவது அகவை நாளை வாழ்த்தி இவ்வாழ்த்து செய்தியை புலம்பெயர் நாடுகளில் வாழும் அவருடைய சக வகுப்பு நண்பர்கள், நண்பிகள் சார்பில் சுவிற்சர்லாந்திலிருந்து இணையர் நந்தினி முருகவேள் இவ்வாழ்த்தினையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வாழ்த்து அறிக்கையில்,

1980ஆம் ஆண்டிருந்து இன்றுவரை எங்களுடன் ஓர் நல்ல பாசமிகு நண்பனாக, சிறந்த தோழனாக, என்றும் துணை நிற்கும் சகோதரனாக இருக்கும் எங்கள் நண்பனுக்கு எங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

சிறு வயதிலிருந்தே வைத்தியக் கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தியை நான் நன்றாக அறிவேன் நாங்கள் ஒன்றாக கிளிநொச்சியில் கல்வி கற்றவர்கள். நாங்கள் வன்னி மைந்தர்கள் என்று சொல்வதில் அன்றும் இன்றும் பெருமை கொண்டுள்ளோம்.

எங்களுடைய பல்கலைக்கழகக் காலங்களில் சனி, ஞாயிறுகளில் கிளிநொச்சி வந்து விஞ்ஞான உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு சத்தியமூர்த்தியும், குகராயாவும் (வைத்தியர் கிளிநொச்சி வைத்தியசாலை) அவருடைய மருத்துவ பீட மாணவர்களும், வர்த்தகதுறை மாணவர்களுக்கு நானும் எனது நண்பிகளும் நண்பர்களும், கலைத்துறை மாணவர்களுக்கு பங்கையற்செல்வன் அண்ணாவுடன் இணைந்து அவருடைய நண்பர்களும், என்னுடைய சகோதரியும் பாடங்களைக் கற்பித்திருந்தோம்.

பாடசாலையில் படிக்கும் காலத்திலே மிகவும் அமைதியான சுபாவமும் எல்லோரிடத்திலும் மிகுந்த அன்புடனும், மரியாதையுடனும் பழகக்கூடியவர்.

சிறு வயதிலே தன்னால் இயன்ற உதவிகளை எல்லோருக்கும் செய்ததை நான் பல சந்தர்ப்பங்களில் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

கிளிநொச்சியில் ஏற்பட்ட எத்தனையோ இடப்பெயர்வின் போது எல்லா மாணவர்களும் இவருடன் இணைந்து செயற்பட்டோம். எங்கள் எல்லோருக்கும் ஓர் முன்மாதிரியாக திகழ்ந்தவர்.

நாங்கள் எல்லோரும் கரடிப்போக்கு விஞ்ஞானக்கல்வி நிலையத்தில் கல்வி கற்ற மாணவர்கள், ஆசிரியர் எட்வேட் மரியதாசு அவர்களின் வழிகாட்டிலில் வளர்ந்தவர்கள்.

நாங்கள் எல்லோரும் இன்று இந்நிலையில் இருப்பதற்கு விஞ்ஞானக் கல்வி நிலையமும் ஆசிரியையகளும் ஓர் காரணமாகும்.

நாங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் எங்களை வளர்த்த கிளிநொச்சி மண்ணையும், மக்களையும் மறப்பதில்லை. மறக்கப்போவதும் இல்லை.

வைத்தியக் கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகவும், கிளிநொச்சி றோட்டறிக் கழகத்தில் தலைவராகவும், கிளிநொச்சி மாவட்ட கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவராகவும், நாங்கள் கல்வி கற்ற விஞ்ஞானக் கல்வி நிலையம் தற்போது நண்பர் இராமமூர்த்தியின் தலைமையில் இயங்கி வருகின்றது.

இவ்விஞ்ஞானக் கல்வி நிலையத்தின் இயக்குனராகவும் இருக்கின்றார். என்னுடைய நண்பராக மட்டுமன்றி எங்களுடைய குடும்ப நண்பராகவும் இருக்கின்றவர்.

அவருடைய சகோதரர்களும் என்னுடைய சகோதரிகளுடன் கல்வி கற்றவர்கள். அவருடைய குடும்பமே மக்கள் சேவைக்கு முதலிடம் கொடுப்பவர்கள்.

இவருடைய சேவைகளைப் பற்றி சுவிற்சர்லாந்து நாட்டில் என்னுடன் கடமையாற்றும் சக சுவிஸ் நாட்டு சமூக சேவையாளர்களுடன் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடி மகிழ்ந்திருக்கின்றேன்.

இவர் என்றும் என் நினைவில் இருக்கும் மறக்க முடியாத இவ் எண்ணங்களுடன் என் நண்பனை எங்கள் குடும்பம் சார்பாகவும், சுவிற்சர்லாந்து நாட்டில் பேர்ண் நகரில் இயங்கும் பேர்ண் வள்ளுவன் பாடசாலை சார்பாகவும் இவ்வாறு வாழ்த்துகின்றேன் நண்பா.

உரிய வேளைகளில் உயிர்களை காத்த உயர்ந்த மருத்துவர் உரிய கருவிகளின்றியே அறுவைச்சிகிச்சை வழங்கிய வல்லுனர். மக்களின் ஓலமும் போரின் உச்சமும் விண்ணைத் தொட்டு முட்டி நிற்க மண்ணை விட்டு விலகாத மருத்துவராய் மகத்தான சேவைகள் வழங்கி மக்களைக் காத்தார்.

போர்வீரர்கள் போல் மனவுறுதி கொண்டு மக்களைக் காத்தார். துணிச்சல் மிகு தங்கள் சேவை தாய்நாட்டில் அன்று இல்லையெனில் இறந்தோர் பட்டியல் மேலும் நீண்டிருக்கும்.

வறிய மக்களின் தேவைகள் அறிந்து சேவைகள் தொடர்வார். கரடிப்போக்குச் சந்தியில் கடனாயும் கல்வி பெறவும் திருப்பிச் செலுத்தி மீள்வளம் தொடரவும் வழிசமைத்தார்.

கிளிநொச்சி வளம்பெற உலககெலாம் வலம் வருவார். அரிய வளர்ச்சிகள் கண்டு மருத்துவதொண்டாற்றினார். உலகறிய உயர்ந்தார். ஊழலற்ற அதிகாரியாய் அரசாங்கத்தால், மக்களால் பாராட்டைப் பெற்றார்.

சத்தியமூர்த்தியெனும் பெயரிட்ட பெற்றோர் தங்கமானவராய் மிளிர்கின்றார் வைத்தியக்கலாநிதி சத்தியமூர்ததி இன்று அரைநூற்றாண்டை தொட்டுவிட்டார். அவரை அறியார் யாருமில்லை என தெரிவித்துள்ளனர்.