உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

Report Print Ajith Ajith in அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ள அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது

இந்த ஆணைக்குழுவின் செயற்படு காலம் எதிர்வரும் 20ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

இதனையடுத்து அதன் ஆயுட்காலமானது எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த செப்டெம்பரில் அமைக்கப்பட்டது.

இதன் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா கடமையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.