கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகெங்கிலும் 18,900 பேர் வரை பலி

Report Print Ajith Ajith in அறிக்கை
80Shares

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகெங்கிலும் 18,900 பேர் வரை பலியாகியுள்ளதாக தெரியவருகிறது.

அதேவேளை 422,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் இன்னும் கொரோனா வைரஸ் தாக்கம் இருந்து வருகிறது.நேற்று வரை 81,218 பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3281 பேர் மரணமாகினர்.அத்துடன் 73650 பேர் நோயில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இத்தாலியில் 6820 பேர் இதுவரை மரணமாகியுள்ளனர். 69000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் 52976 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 705 பேர் பலியாகியுள்ளனர்.

இதில் 210 பேர் நியூயோர்க்கிலும், வோஷிங்டனில் 123 பேரும் லூசினியாவில் 46 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 1.3 பில்லியன் மக்கள் 21 நாட்களுக்கு வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அங்கு அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.