ஸ்பெய்னை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸின் தீவிரம்

Report Print Ajith Ajith in அறிக்கை

கொரோனா வைரஸின் தீவிரம் இன்னும் ஸ்பெய்னை ஆட்டிப்படைத்து வருவதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அங்கு நேற்று மாத்திரம் 24 மணித்தியாலங்களில் 832 பேர் கொரோனாவினால் காவு கொள்ளப்பட்டனர்.

இதனையடுத்து அங்கு கொரோனா வைரஸ் மரணங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தை தாண்டியுள்ளது.

எனினும் வழமையாக அதிக மரண செய்திகளை கொண்டிருக்கும் இத்தாலியின் நேற்றைய நிலைமை இன்னும் தெளிவில்லை.

பிரித்தானியாவில் நேற்று மாத்திரம் 269 பேர் பலியாகினர். ரஸ்யாவும் அயர்லாந்தும் இரண்டு வாரகால முடக்கல் நிலையை அறிவித்துள்ளன.

கொரோனா வைரஸூக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரை சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்குவது குறித்து ஆலோசித்து வருவதாக அமரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இந்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளவர்களில் அரைவாசிப் பங்கினரான 51000 பேர் நியூயோர்க் மக்களாவர்.

எனவே தான் இது தொடர்பில் ஆலோசிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப இடமான சீனாவின் வுஹான் மாகாணத்தின் ஒரு பகுதி திறக்கப்பட்டு அங்கு சனநடமாட்டத்துக்கு வழியேற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று மரணங்களின் எண்ணிக்கை உலகளாவிய ரீதியில் 29000 ஆக உயர்ந்துள்ளது.

6 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்துக்கு ஆறாயிரம் பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர்.