கொரோனா வைரஸ் தொடர்பில் உலகளாவிய தகவல்கள்

Report Print Ajith Ajith in அறிக்கை
372Shares

பெரிய வெள்ளிக்கிழமையான இன்று பல மில்லியன் கிறிஸ்தவர்கள் முடங்களுக்குள் இருந்து பெரிய வெள்ளியை கொண்டாடுகின்றனர்.

இந்தியாவில் சுமார் 28 மில்லியன் கிறிஸ்தவர்கள் பெரிய வெள்ளி ஆராதனையில் இணையம் மூலம் இணைந்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளபோதும் கொரோனா வைரஸ் தொற்றுகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளது.

நியூயோர்க்கில் 160,000 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.

ஸ்பெய்னில் 153ஆயிரம் பேரும் இத்தாலியில் 143ஆயிரம் பேரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

சீனாவில் எல்லைகள் மூடப்பட்ட பின்னர் உள்வரும் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தென்கொரியாவில் முதன்முறையாக புதிய கொரோனா வைரஸ் தொற்றாளிகள் எவரும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படவில்லை.

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் மரண எண்ணிக்கை ஒரு இலட்சமாக உயர்ந்துள்ளது .

இதேவேளை உலக சுகாதார மையத்துக்கும் அமரிக்காவுக்கும் இடையிலான முறுகல் தொடர்கிறதாக சர்வதேச ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தியாவில் இருக்கும் சுமார் 5000 பிரித்தானியர்களை நாட்டுக்கு அழைத்து வர அந்த நாடு 12 விமானங்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது.