5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை பெற விண்ணப்பித்துள்ள 44 ஆயிரம் பேர்

Report Print Steephen Steephen in அறிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள 44 ஆயிரத்து 767 பேர் மேன்முறையீட்டு விண்ணப்பங்களை செய்துள்ளனர்.

இந்த விண்ணப்பங்கள் குறித்து ஆராயுமாறு மாவட்ட அரச அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பொருளாதார மறுவாழ்வு மற்றும் வறுமை ஒழிப்பது சம்பந்தமான ஜனாதிபதி செயலணிக்குழு தெரிவித்துள்ளது.

கிடைத்துள்ள மேன்முறையீட்டு விண்ணப்பங்களில் அதிகளவான விண்ணப்பங்கள் களுத்துறை மாவட்டத்தில் இருந்து கிடைத்துள்ளதுடன் அந்த மாவட்டத்தில் 5 ஆயிரம் பேர் மேன்முறையீட்டு விண்ணப்பங்களை செய்துள்ளனர்.

இதற்கு அடுத்ததாக கொழும்பில் 4 ஆயிரம் பேர் மேன்முறையீட்டு விண்ணப்பங்களை செய்துள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 33 மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

அத்துடன் கண்டி மாவட்டத்தில் 176 மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பொருளாதார மறுவாழ்வு மற்றும் வறுமை ஒழிப்பு சம்பந்தமான ஜனாதிபதி செயலணிக்குழு குறிப்பிட்டுள்ளது.