குட்டிமணியின் மனைவி லண்டனில் மரணம் - டெலோ இரங்கல்

Report Print Theesan in அறிக்கை

தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோவின் ஸ்தாபகர்களில் ஒருவரான குட்டிமணி அவர்களின் பாரியார் இராசரூபராணி இயற்கை எய்தியுள்ளதாக தெரிவித்துள்ள தமிழீழ விடுதலை இயக்கம், குறித்த துயர செய்தி அறிந்து தாம் வேதனையடைகின்றோம் எனவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகராக எமது இயக்கத்தின் முதுகெலும்பாக செயல்பட்டவர் குட்டிமணி. அவரது துணைவியார் இன்று மரணமடைந்த செய்தியறிந்தோம்.

அன்னாரின் பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எமது தமிழ் ஈழ விடுதலை இயக்க உறுப்பினர்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கல்களையும் , கண்ணீர் அஞ்சலிகளையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன் என அவர் கூறியுள்ளார்.

குட்டிமணியின் மனைவி லண்டனில் காலமானார்!