இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கையில் இன்று 39 பேர் இணைந்துள்ளனர்.
இதனையடுத்து நாட்டுக்குள் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 3234ஆக உயர்ந்துள்ளது.
ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து வந்த 10 பேர், குவைத்தில் இருந்த வந்த 6 பேர், கட்டாரில் இருந்து வந்த 16 பேர், எத்தியோப்பியாவில் இருந்து வந்த ஒருவர், யுக்ரெய்னில் இருந்து வந்த ஒருவர் மற்றும் மாலைத்தீவில் இருந்து வந்த 2 பேர் உள்ளிட்டோரே கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுவோரின் எண்ணிக்கை 226ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 2996 பேர் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.