இலங்கையில் பிறந்த ஒரு குழந்தையின் முழுமையான கல்வி மற்றும் முழு ஆரோக்கியம், தெற்காசிய மற்றும் குறைந்த நடுந்தர வருமானம் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது 60 வீத வளர்ச்சியை கொண்டது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கியால் நேற்று வெளியிடப்பட்டுள்ள 2020 மனித மூலதன அட்டவணையில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.
மனித மூலதனத்தில் முதலீடுகள் - மக்கள் தங்கள் வாழ்க்கையில் சேர்ந்துக் கொள்ளும் அறிவு, திறன்கள் மற்றும் ஆரோக்கியம் என்பன முக்கியமானவை.
அதிலும் குழந்தைகளின் திறன் என்பது ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு முக்கியமாக பங்கை ஆற்றுகிறது என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றின் பின்னர் இலங்கை மக்கள், குழந்தை திறன் விருத்தி செயற்பாடுகளில் முதலீடு செய்வது முன்னெப்போதையும் விட மிக முக்கியமானது என்று உலக வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி ப்பாரிஸ் எச்.ஹதாத்-செர்வோஸ் குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகால ஊட்டச்சத்து குறைப்பாடு மற்றும் உயர் தரமான கற்றல் தேவை ஆகியவற்றின் காரணமாக தடுமாற்றம் என்பது மனித மூலதன குறியீட்டின் இரண்டு பகுதிகள் ஆகும்.
இதில் இலங்கைக்கு முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொற்றுநோய்களின் போதும் அதற்குப் பின்னரும் மக்களைப் பாதுகாப்பதற்கும், முதலீடு செய்வதற்கும், நீண்ட கால தீர்வுகளை உருவாக்கவும், உலக வங்கி குழு இலங்கை உட்பட்ட உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுடன் நெருக்கமாக செயற்பட்டு வருவதாகவும் உலக வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி ப்பாரிஸ் எச்.ஹதாத்-செர்வோஸ் தெரிவித்துள்ளார்.