தமிழர்களின் பிரதான உணவுகளின் விலைகள் அதிகரிப்பு! ஜனாதிபதி செயலாளருக்கு பிரதமரின் பணிப்புரை

Report Print Sujitha Sri in அறிக்கை
1114Shares

உழுந்து இறக்குமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்வது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவிற்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளுக்கு உழுந்து முக்கியத்துவம் பெறுவதனால், உழுந்து மீதான இறக்குமதி தடையை தளர்த்துமாறு யாழ்ப்பாணம் வர்த்தக சங்கம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் எழுத்துமூல கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

இந்த கோரிக்கையை ஆராய்ந்த பிரதமர், ஜனாதிபதி செயலாளருக்கு இன்று காலை இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

உழுந்து இறக்குமதி தடைப்பட்டுள்ளமையினால், தமிழர்களின் பிரதான உணவு வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதை யாழ். வர்த்தக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதையடுத்து, உழுந்து மீதான தடையை மறுபரிசீலனை செய்வதற்கு கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி செயலாளருக்கு பிரதமர் இன்று காலை ஆலோசனை வழங்கியுள்ளார்.