திடீர் நீர் ஊற்றுகள், நிலப்பகுதிகளில் வெடிப்புகள் ஏற்படலாம்! இலங்கையின் நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Report Print Ajith Ajith in அறிக்கை
544Shares

நாட்டில் சீரற்ற காலநிலையை தொடர்ந்து சில இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதன்படி களுத்துறை, கேகாலை , நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே திடீர் நீர் ஊற்றுகள், சுவரில் வெடிப்பு மற்றும் நிலப்பகுதிகளில் வெடிப்புகள் ஏற்பட்டால் அது மண்சரிவுக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

எனவே பொது மக்கள் கவனத்தில் கொள்ளுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.