ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு வவுனியா தமிழரசு இளைஞர் அணி கண்டனம்

Report Print Theesan in அறிக்கை

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் இருவர் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித்தலைவர் சி.சிவதர்சன் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று அவர் அனுப்பி வைத்துள்ள விசேட செய்திக்குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும்,

முல்லைத்தீவு, முறிப்புப்பகுதியில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் தேக்குமரங்கள் கடத்தப்படுவதையடுத்து குறித்த இடத்திற்கு நேரில் சென்று உண்மையை உலகுக்கு வெளிப்படுத்த முயன்ற ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன், மற்றொரு ஊடகவியலாளரான கணபதிப்பிள்ளை குமணன் ஆகிய இருவரும் சட்டத்திற்குப் புறம்பான முறையில் கடத்தல் செயற்பாட்டில் ஈடுபட்ட கும்பலால் தாக்கப்பட்டதை தாம் வன்மையாக கண்டிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதல் செயற்பாடு தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்ட அவர் அப்பகுதியில் காடழிப்பு தொடராமல் இருப்பதை வன இலாகா மற்றும் பொலிஸார் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.