குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வருவோருக்கு ஓர் அறிவிப்பு

Report Print Sujitha Sri in அறிக்கை

குடிவரவு மற்றும் குடியல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் பொது மக்களுக்கு அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், பத்தரமுல்ல பிரதான அலுவலகத்திற்கு வருகை தருவதற்கு செல்லுபடியான தினத்தை முன்பதிவு செய்து கொள்வது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை திணைக்களத்தால் குறிப்பிடப்பட்டுள்ள தினத்தில் மாத்திரம் சேவையை பெற்றுக் கொள்வதற்காக வருகை தர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் செல்லுபடியான முன்பதிவு தினம் இன்றி வருகை தருபவர்கள் மற்றும் தற்பொழுது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேச மக்கள் ஆகியோருக்கு அலுவலக வளாகத்திற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.