நிதி மோசடி தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச விடுவிப்பு

Report Print Ajith Ajith in அறிக்கை
102Shares

திவிநெகும திணைக்களத்தில் நிதி மோசடி தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் சேர்த்து வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த மேலும் மூவரையும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுமார் 2992 மில்லியன் ரூபா நிதியை 2015ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கான பிரச்சார செயற்பாடுகளின் போது “இசுறுமத் நிவாஹன” என்ற திட்டத்துக்காக செலவிட்ட குற்றச்சாட்டே பசில் ராஜபக்சவின் மீது சுமத்தப்பட்டிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டமா அதிபரும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திவிநெகும நிதி மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் மேலும் மூன்று பேர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அனைவரும் முற்றாக விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.