கொரோனா வைரஸ் தொற்றிய நபர்கள் குணமடைந்து, மூன்று மாதத்திற்கு மேற்பட்ட காலத்தின் பின்னரும் தொற்றாளர்களின் நுரையீரலுக்கு சேதம் ஏற்படக் கூடும் என தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தின் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவ குழுவினர் நடத்திய புதிய ஆய்விலிருந்து இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
10 கொரோனா வைரஸ் தொற்றாளர்களை பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
புதிய ஸ்கேன் தொழிநுட்பத்தை பயன்படுத்தி இந்த தொற்றாளர்களின் நுரையீரல்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இந்த பரிசோதனை முடிவுகளின் படி வழமையாக மேற்கொள்ளும் ஸ்கேன் பரிசோதனைகளின் போது கண்டறிய முடியாத வகையில் தொற்றாளர்களின் நுரையீரல்களில் சேதம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றாளர்களின் நுரையீரல்களுக்கு ஏற்பட்ட சேதத்தை கண்டறிய, நடத்தப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை சினோன் என்ற வாயுவை பயன்படுத்தி நடத்தப்பட்டுள்ளது.