ஷானி அபேசேகரவின் பிணை மனு நிராகரிப்பு

Report Print Kamel Kamel in அறிக்கை
86Shares

குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா உயர் நீதிமன்றினால் இந்த பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன தொடர்பிலான வழக்கில் போலி சாட்சியங்களை திரட்டியதாக ஷானி மீது குற்றம் சுமத்தி கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த சில மாதங்களாகவே ஷானியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஷானி அபேசேகரவின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஏதேனும் பாதிப்பு நடந்தால் அந்த பொறுப்பினை அரசாங்கம் ஏற்க வேண்டுமெனவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ நாடாளுமன்றில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மனுதாரர் சார்பில் சட்டத்தரணி கௌரி சங்கர் தவராசா முன்னிலையாகியிருந்தார்.