சுவிட்சர்லாந்தில் காரில் பயணித்த மாணவியிடம் தவறாக நடந்துக்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட வாகன ஓட்டுநர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளது.
2015ஆம் ஆண்டு சூரிச் பகுதியில் இளம் கல்லூரி மாணவி ஒருவர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் டாக்ஸியில் தூங்கியதை சாதமாக பயன்படுத்தி ஓட்டுநர் மாணவியிடம் தவறாக நடக்க முற்பட்டுள்ளார்.
விழிப்படைந்த மாணவியிடம் ஓட்டுநர் தவறாக பேசியதுடன், இந்த மாணவி குறித்த நபரை தாக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த ஓட்டுநர் அந்த சிறுமியை காரில் இருந்து தூக்கி எறிந்துள்ளார்.
இதன் காரணமாக ஓட்டுநர் மாணவி தான் அடித்து காரை சேதப்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி வழக்கு முறைப்பாடு செய்தார்.
குறித்த வழக்கனது சூரிச் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது ஓட்டுநர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றம் அவருக்கு 10 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 3000 பிராங்குகள் நட்டஈடாக வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.