அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட பல இலங்கையர்களை திருப்பி அனுப்பிய சுவிற்சர்லாந்து!

Report Print Jeslin Jeslin in சுவிற்சர்லாந்து

சுவிஸில் உள்ள 10இற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் இன்றைய தினம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 10இற்கும் மேற்பட்டோர் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை 5 மணியளவில் விசேட விமானம் ஒன்றின் மூலம் குறித்த இலங்கைத் தமிழர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு நாடுகடத்தப்படும் அனைவரும் நாளைய தினம் காலை கொழும்பைச் சென்றடைவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.