சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்ற சிவன் கோயில் தேர் திருவிழா

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் அமைந்துள்ள கிளாட்புறுக் சிவனாலயத்தின் தேரோட்ட நிகழ்வு இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.

சிவபெருமான் தேரேறி வர பல்லாயிரங்கணக்கான மக்கள் புடை சூழ சூரிய பகவானின் ஒளிக்கீற்றில் முகம் மலர்ந்து அருள்பாலித்தார்.

இதன்போது ஆலயவளாகம் பத்தர்கள் கூட்டத்தினால் அலைபோல் திரண்டிருந்தது.

எங்கு பார்த்தாலும் அரோகரா கோசமும், இறை பஜனையுடன் மங்கையர் பால்குடம் ஏந்தியும், கற்பூரச்சட்டி ஏந்தியும் அங்கப்பிரதட்சணம் செய்தும், காவடியாடியும் நேர்த்திக்கடன்களை செலுத்தியிருந்தனர்.

முழுமையான காணொளி மற்றும் புகைப்படங்களை காண இங்கு அழுத்துங்கள்

இந்த நிலையில் ஆலவட்டம், குடை, நந்திக்கொடி சகிதம் சிவனார் தேர் ஏறி வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்ததுடன், ஆலய வளாகம் விழாக்கோலம் பூண்டு தாயகத்தை கண்னெதிரே கொண்டு வந்தது.

பிரமாண்டமான கொட்டகை அமைத்து கலை நிகழ்வு பிரமாண்டமாக நடைபெற்றது.

உணவுக்கடைகளும், உடைக்கடைகளும், சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள் கடைகளும், சிறுவர்களுக்கான விளையாட்டு தளங்களும் அமைக்கப்பட்டு நிகழ்வு களைகட்டியது.

முழுமையான காணொளி மற்றும் புகைப்படங்களை காண இங்கு அழுத்துங்கள்