சுவிஸில் கடும் மோதல்! யாழ். தமிழ் இளைஞன் கைது

Report Print Vethu Vethu in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் Bremgarten பகுதியில் வாழும் தமிழ் குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு வன்முறையாக மாறியது.

இரு குழுக்களும் கடுமையாக மோதிக் கொண்டதுடன் கத்தி் குத்து வரை சென்றுள்ளது.

அந்நாட்டு நேரப்படி கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில், டவுன் ஹோல் சதுக்கத்துக்கு பக்கத்தில் மோதல் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் இரத்தக் காயங்களுடன் காணப்பட்ட இருவரை, அயலவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு வன்முறையாக மாறி, கத்திக் குத்தில் முடிந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோதல் சம்பவம் குறித்து Bremgarten பகுதி விசாரணை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கத்திக் குத்து தாக்குதல் நடத்தியவர் மதுபோதையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.