மார் சிறப்பு குழு! ஞானலிங்கேச்சுரர் வருகை

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

சுவிற்சர்லாந்து அரசு இரண்டாவது முறையாக மியன்மார் சமூக மற்றும் அரசியற் தலைவர்களை அழைத்து சிறப்பு பயிற்ச்சியினை வழங்கியிருந்தது.

குறித்த நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக பேர்ன் பல்சமய இல்லத்திற்கு இக்குழுவினை சுவிற்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சின் சிறப்புத்தூதுவர் திரு. மார்தின் ஸ்ரூச்சிங்கெர் அழைத்து வந்திருந்தார்.

இக்குழுவினை பல்சமய இல்லத்தின் பெயரால் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர்களில் ஒருவரான திருநிறை. சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் வரவேற்று பல்சமய இல்லத்தின் செயற்பாட்டை யேர்மன் மற்றும் ஆங்கில மொழியில் எடுத்துரைத்தார்.

இக்குழுவினர் தமிழ் வழிபாட்டுத் திருக்கோவிலிற்கு வருகை அளித்தனர். ஒரு மணிநேரத்திற்குள் தமிழர் வாழ்வியல், புலப்பெயர்வின் பின்புலம் மற்றும் புலம் பெயர் சமூகம் எதிர்நோக்கும் சவால்கள் என்பன சைவநெறிக்கூடத்தால் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

உலகப்பொதுச் சட்டத்திற்கு அமைய சொந்த நாட்டில் ஒரு மனிதன் தன் உரிமைகளை பெற்றுவாழாத சூழலில், இனத்தால், மொழியால், சமயத்தால் வேறுபடுத்தப்பட்டு, ஏற்றத்தாழ்வுகள் பேணப்படுமாயின் அது முரண்பாடுகளைக் களையாது என்பது எமது அனுபவம் என்பதும் சைவநெறிக்கூடத்தால் இக்குழுவிற்கு பகிரப்பட்டுள்ளது.

மேலும் நிபந்தனை அற்ற மதிப்பும் புரிதலும் ஏற்பட மேற்காணும் சூழல் ஈழம் உட்பட உலகெங்கும் நீங்க வேண்டும் என்பதும் எமது அவா என இப்பயிலர்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துப் பரிமாற்றமாகவும் எண் சமயங்கள் சேர்ந்து இயங்கும் முறமை தொடர்பில் அறிவந்த குழுவிற்கு புலம்பெயர் ஈழத்தமிழர் நிலையினை வெளிப்படுத்த வாய்ப்பாக அமைந்தது.

28 உறுப்பினர்களுடன் வருகை அளித்த இக்குழு நிறைவில் "வணக்கம்" உணவகத்தில் தமிழ் உணவுவிருந்து ஏற்று அடுத்த தமது நிகழ்ச்சிக்கு சென்றுள்ளமை குறிப்பிடதக்கது.

Latest Offers