சுவிற்சர்லாந்து பேர்ன் நகரில் இடம்பெற்ற நீத்தார் கடன் ஆற்றல் பயிலரங்கு

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

சுவிற்சர்லாந்து, சைவத் தமிழ் மக்கள் தமது சமய நெறியின் அடிப்படையில் நீத்தார் கடன் ஆற்றல் பயிலரங்குடன் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு சுவிற்சர்லாந்து பேர்ன் நகரசபையின் வலயத்திற்குட்பட்ட பிறேம் கார்டென் சுடுகாட்டில் அண்மையில் நடைபெற்றுள்ளது.

குறித்த பகுதியில் நீத்தார் கடன் ஆற்றலுக்கு பேர்ன் நகரம் ஒப்புதல் வழங்கியதின் அடிப்படையில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சைவ, பௌத்த, கிறித்தவ, இஸ்லாமிய மற்றும் யூதர்களது நீத்தார்கடன் முறைகள் சடங்குகள் பொதுமக்களுக்கு எடுத்து விளக்கப்பட்டதுடன் சைவநெறிக் கூடத்தின் ஏற்பாட்டில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் திருநிறை. சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் முற்பகல் 11.00 - பிற்பகல் 02.00 மணிவரை நான்கு பயிலரங்குகளை பொதுமக்களுக்கு ஆற்றியுள்ளார்.

சைவத் தமிழர்கள் நீத்தார் கடன் ஆற்றப் பயன்படுத்தும் பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பேர்ன் நகரம், சுடுகாட்டிற்கு உட்பட்ட நிலத்தில் வைரவர் வழிபாடு செய்வதற்கும் இடத்தினை ஒதுக்கியுள்ளது.

2019ம் ஆண்டு இங்கு வைரவர் மற்றும் காளி ஆகிய திருவுருவங்களை நிறுவி திருக்கோவில் அமைப்பில் வழிபாட்டுத் திடலை ஏற்படுத்திக் கொடுக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளதுடன் இக் கோவிலுக்காக ஈழத்தில் இருந்து சுவிஸ் வந்தடைந்த வைரவர் மற்றும் காளி சிலைகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.