சுவிஸில் ரெஜினோல்ட் குரேயுடனான சந்திப்பை எதிர்த்து நடைபெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்படடம்

Report Print Thayalan Thayalan in சுவிற்சர்லாந்து

தாயக உறவுகளுக்கான அபிவிருத்தி என்ற போர்வையில் சுவிசில் 11ஆம் திகதி நடைபெற இருந்த வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயுடனான சந்திப்பானது, தமிழின உணர்வாளர்களின் போராட்டத்தினால் நிறுத்தப்பட்டுள்ளது.

திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாகவே, சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உள்ளிட்ட குழுவினருடனான கலந்துரையாடல் ஒன்று எமது மக்களின் அமைப்பான “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்“ பேரில் தன்முனைப்பு அதிகாரங்களுடன் இயங்கும் நிர்வாக தலைவரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இருந்த போதிலும் இக் கலந்துரையாடலை வர்த்தகப் பெருமக்கள் மற்றும் புங்குடுதீவு இனமான தமிழ் மக்களோடு சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களும் இணைந்து புறக்கணித்தமையானது முள்ளிவாய்க்காலில் எமது இனம் வீழ்த்தப்படவில்லை ஈழத்தமிழினம் இன்னும் உயிர்ப்புடனும், நிமிர்வுடனும், தாயகவிடுதலைக் கனவுடனும்தான் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சந்திப்பானது நடைபெறவிருந்த இடத்தின் நான்கு முனைகளும் தமிழின உணர்வாளர்களினால் முற்றுகையிடப்பட்டது. இதன்போது விஸ் பொலிஸாரால் இச்சந்திப்பு முற்றாக நிறுத்தியதோடு, கூடிநின்ற அனைவரையும் அமைதியாக கலைந்து செல்லுமாறு கேடகப்பட்டதுக்கமைவாக மக்கள் அனைவரும் போராட்ட களத்தை விட்டு கலைந்து சென்றனர்.

மிகக்குறுகிய காலப்பகுதிக்குள் அறிவித்தல் விடுக்கப்பட்ட போதும் இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பெருமளவில் மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு