தமிழில் அன்னையர் வழிபாடு நோற்கும் ஞானலிங்கேச்சுரம்

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

கருவறையில் தாய்மொழியில் வழிபாடு நடைபெறும் சுவிற்சர்லாந்து பேர்ன் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் வாலையன்னை வழிபாடு நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.இப்பெருவிழாவின் சிறப்பு திருமுழுக்கு முதல் அனைத்து சடங்குகளையும் பெண்களே முன் நின்று செய்துள்ளனர்.

இதில் 11 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வாலைக் குமரி அன்னையாக எண்ணி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பல குழந்தைகள் அன்னையின் திருவுருவாக காட்சி அளித்தனர்.

கூடியிருந்தவர்கள் அம்மனாக காட்சி அளித்த சிறுமிகளை வணங்கி வழிபாட்டில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஈழவிடுதலைப்போர் பெண்விடுதலையினை ஈழத்தமிழர்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்பது மிகையாகாது. ஞானலிங்கேச்சுரத்தில் இன்று பெண்கள் தெய்வமாக மதிப்பளிக்கப்பட்டு வழிபாடு செய்கின்றனர்.