சுவிஸ் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்த இலங்கை அரசியல் தலைவர்கள்

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

சுவிற்சர்லாந்து பல்கலைக்கழக மாணவர்களை இலங்கையிலிருந்து சென்ற அரசியல் தலைவர்கள் சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பு நேற்றைய தினம் பேர்ன் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சந்திப்பில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களான, அலவத்துவல, தெஹிவல லியனகே, சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சீனித்தம்பி யோகேஸ்வரன் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கல்வி உள்ளிட்ட இலங்கை தொடர்பான பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் இந்த சந்திப்பானது சினேகபூர்வமானதாக இருந்தது என அறியமுடிகிறது.