சுவிற்சர்லாந்தை நோக்கி அணி திரளும் கலைஞர்கள்! மகிழ்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள்

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி சுவிற்சர்லாந்தில் நடைபெற இருக்கின்ற IBC தமிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஐரோப்பா, இலங்கை, இந்தியா போன்ற தேசங்களில் இருந்து பெரும் தொகையிலான கலைஞர்கள் விரைந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

உலகில் தமிழர்கள் வாழும் நாடுகள் அனைத்திலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்ற IBC- தமிழ் தொலைக்காட்சி 'நாட்டிய தாரகை' நடனக்கலைப் போட்டியையும், 'தங்கத் தமிழ் குரல்' பாடல் போட்டியையும் நடத்தி வருகின்றது.

புலம்பெயர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக நடைபெற்று வருகின்ற இந்த இரண்டு நிகழ்ச்சிகளினதும் இறுதிப் போட்டிகள், பல ஆயிரம் புலம்பெயர் மக்கள் முன்னிலையில் சுவிற்சர்லாந்து, போரம் பிறைபூர்க் மண்டபத்தில் நடைபெற இருக்கின்றன.

கனடா, ஐரோப்பா தேசங்களைச் சேர்ந்த புலம்பெயர் தமிழ் போட்டியாளர்கள் பங்குபற்றும் குறித்த நிகழ்வில் நடுவர்களாக இலங்கை, தென் இந்தியா மற்றும் ஐரோப்பிய பிரபல்யங்கள் கலந்துகொள்ள இருக்கின்றார்கள்.

அவ்வாறு கலந்துகொள்ளும் பிரபல்யங்கள் பற்றிய விபரங்களை வெளியிட மறுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், புலம்பெயர் மக்கள், சற்றுமே எதிர்பார்க்காத, பலர் நடுவர்களாகக் கலந்துகொள்ள உள்ளார்கள் என்கின்ற தகவலை மாத்திரம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers