சுவிற்சர்லாந்தில் இடம்பெற்ற மணியா இருக்கும் இசைநிகழ்ச்சி!

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

"மணியா இருக்கும்" என்ற இசைநிகழ்ச்சி சுவிற்சர்லாந்தில் - சொலத்தூண் மாநிலத்தின் நேற்று முன்தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு முழுக்க முழுக்க சுவிற்சர்லாந்து வாழ் இரண்டாம் தலைமுறையினரின் நிகழ்ச்சியாகவே அமைந்திருந்தது.

நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டது போல் "Indipendent music" இசைக்கலைஞர்களிற்கானதாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் இசைக்கலைஞர்கள் இருவர் தமது புதிய ஆல்பங்கள் இரண்டினை வெளியிட்டிருந்தனர்.

குறித்த நிகழ்வின் அனைத்து பாடல்களும் இந்திய தமிழ் சினிமா பாடல்களுக்கு நிகரானவை என்பது மிகையான கூற்றல்ல. புலம் பெயர் சமூகம் இளம் தலைமுறையினரின் இந்த முயற்சிகளை தமது புதிய அடையாளங்களாக வரையறுத்து தகுந்த ஊக்குவிப்புக்களை இவ் இளைய கலைஞர்களுக்கு வழங்க முன்வர வேண்டும்.

இந்நிகழ்வில் "NAVZ47"எனும் பெண் கலைஞர் கனடாவிலிருந்து வந்து பிரத்தியேக பாடல்களை பாடி இரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி ஆச்சரியப்படுத்தினார்.

இவரது "மல்லிமல்லி" என்ற பாடல் நெஞ்சைத் தொட்டது. "யுத்ததினால் பாதிக்கபட்ட பலர் இன்றும் நாதியற்றுள்ளனர்" என்பதை புலப்படுத்தியது. இத்தகைய பாடல்கள் மூலம் தம்மை ஓர் சமூக அக்கறை உள்ள கலைஞராகவும் வெளிப்படுத்தியுள்ளார்.

இவரின் பாடல்களும், MIA மாதங்கியின் பாடல்களும், புலம்பெயர்ந்து குடியேறி வாழும் தமிழர்களின் குரல்களாக ஒலிப்பவை.

ஒருமைப்பாட்டைக் கொண்டவை. இவர்களைப் பற்றி புலம்பெயர் தமிழ் உலகம் ஏன் பேச முற்படுவதில்லை? என்ற கேள்விக்கு பதில் தேடிய போது,

என்ன தான் இந்நாடுகளை தமது நிரந்தரவதிவிடமாக மாற்றிக் கொண்ட போதும் எமது சமூகம் இன்னமும் வேலிக் கலாச்சாரத்துக்குள்ளேயே பெண்களை வைத்து நோக்குகிறது.

இவ்விரு பெண்களும் கலாச்சாரம் என்ற போர்வையில் போடப்படும் தடைகளை உடைத்தெறிந்து தமக்கென புதிய அடையாளங்களை வகுத்துக் கொண்ட புதுமைப்பெண்கள்.

இவர்களால்உடைக்கபட்ட கலாசார பாதுகாப்பு அரண்களை கண்ட புலம்பெயர் சமூகம் தமக்கே உரிய பாணியில் அடக்கி வாசித்து வருகிறது.

கலாசாரம் என்ற போர்வையில் பாதுகாக்கப்படும் பொய்யான அரண்கள் ஒரு புதிய சந்ததியினரின் உணர்வெள்ளைக்குள் தடைபடுகின்றது என்பதை பற்றி சிந்திக்காமல் உள்ளது.

சுவிற்சர்லாந்து பல்கலைக்கழக மாணவர் மன்ற உறுப்பினர்கள் சமூகப்பிரக்ஞையுடன் பல திட்டங்களைஆற்றி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் சென்ற வருடம் தமிழ் சமூகத்தில் ஊன்றிப்போயிருக்கும் சாதியம் பற்றிய விடயத்தினை திறந்த மேடையில் வைத்து ஆராய்ந்துள்ளனர்.

அதே போல் தமது தாய் நாட்டு மக்களின் நலன்களிலும் அக்கறை கொண்டு அந்த மக்களிற்கான பல உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் இவ் ஆண்டு "தண்ணீர்" நேரடி உதவித்திட்டத்திற்கு நிதிசேர்க்கும் பணியில் "தண்ணீர்" உதவி அமைப்புடன் சேர்ந்தும் பணியாற்றியுள்ளனர்.

அதனடிப்படையில் "தண்ணீர் உதவி அமைப்பும் Direkte Hilfe Thannir-Wasser" "பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் TAVS" இணைந்து "மணியாக இருக்கும்" நிகழ்வில் நிதி சேகரித்தோம்.

நிதி சேகரிப்பின் போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவாரான ரவிவர்மன் சிவசோதிலிங்கம் NAVZ47 பாடகியின் "நான் சிறிலங்கா போனேன்" பாடலில் வரும் "கால் கை இழந்து நாதி அற்று இருக்கும்" என்ற வரிகளை குறிப்பிட்டு தனது பேச்சை ஆரம்பித்து பார்வையாளர்களை நோக்கி "நீங்கள் இந்த திட்டத்திற்கு உதவினால் எமது உறவுகள் பலரது வாழ்கை மணியாக அமையும் என்று முடித்தார்.

இவரது உரையை தொடர்ந்து இந்நிகழ்சித் தொகுப்பாளர் இந்த வகை மக்களுக்கு உதவிகளை செய்ய முன் வந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு அனைவரையும் எழுந்து நின்று நன்றி தெரிவிக்குமாறு கேட்டதற்கிணங்க அரங்கமே எழுந்து நின்றமை எம்மை மெய்சிலிர்க்க வைத்தது.