சுவிற்சர்லாந்தில் முத்தமிழ் கலைநிகழ்வுகளுடன் தமிழர் களறி திறக்கப்படவுள்ளது...!

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ன்நகரில் ஐரோப்பாத்திடலில் தமிழர் களறி திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை காலை முத்தமிழ் கலைநிகழ்வுகளுடன் தமிழிசை முழங்க ஆரம்பமாகவுள்ளது.

பல நாடுகளில் இருந்து தமிழ்ச் சான்றோர்களும், பிறமொழி அறிஞர்களும், கலைஞர்களும், பல்துறைப் பெருமக்களும் இத் திறப்புவிழாவில் பங்கெடுத்து சிறப்பிக்க உள்ளனர்.

மேலும், அனைத்து தமிழ் உறவுகளையும் திறப்புவிழாவில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உலகில் தமிழர் அடையாளங்கள், வரலாற்றுச் சான்றுகள் வெளிவரும் போதெல்லாம், அவற்றை அமுக்கிவிடுவதில் அல்லது அழித்துவிடுவதில் பல்வேறு தரப்புக்கள் முனைப்புக்காட்டுகின்றன.

இவற்றையும் மீறி வெளிவருபவை மிகச் சொற்ப விடயங்களே. தமிழர்களது தொன்மைமிக்க வாழ்வியலை, வீரமும் ஈகையும் நிறைந்த தமிழர் போராட்ட வரலாற்றை நாம் நன்கறிந்திருப்பதோடு மட்டுமின்றி அதனை பேணிப் பாதுகாத்து எமது எதிர்கால சந்ததியிடம் உரியவாறு ஒப்படைக்கவேண்டும்.

இது இன்றைய தலைமுறையினராகிய எமது வரலாற்றுக் கடமையாகும்.