சர்வதேச ஓட்டப் போட்டியில் தமிழின அழிப்பினை வெளிப்படுத்திய தமிழின உணர்வாளர்கள்!

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

சுவிஸ், பேர்ண் மாநிலத்தில் சர்வதேச ரீதியிலான மரதன் ஓட்டப்போட்டி ஒன்று நடைபெற்றுள்ளது.

கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற இந்த ஓட்டப்போட்டியில் தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்தய தூரத்தைக் கடந்து, பதக்கங்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.

அத்துடன் இலங்கை சிங்களப் பேரினவாத அரசினால் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழின அழிப்பினையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

பேர்ண் நாடாளுமன்றம் அருகாமையில் உள்ள திடலில் தமிழன அழிப்பிற்கு நீதி கேட்கும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலுக்கு அணிதிரளுமாறு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது.