இலங்கையிடம் சுவிற்சர்லாந்து விடுத்துள்ள கோரிக்கை

Report Print Ajith Ajith in சுவிற்சர்லாந்து

இலங்கையில் சமாதானத்தையும், உறுதிப்பாட்டையும் நிலைநாட்டுமாறு சுவிற்சர்லாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையிலேயே இந்த கோரிக்கையை சுவிற்சர்லாந்து விடுத்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சு மேற்படி விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

இலங்கையில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் சுவிற்சர்லாந்தில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

அண்மைக்காலமாக இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துள்ளன. தொடர்ந்தும் சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கான காரணங்களை இன்றும் இலங்கையின் அரசாங்கங்கள் நிவர்த்தி செய்யவில்லை. இந்த நிலையில் இலங்கையின் சமாதானத்துக்காக முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers